“நீங்கள் எரிப்பது உடலை அல்ல உலக முஸ்லீம்களின் உள்ளத்தை” - மன்னாரில் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

“நீங்கள் எரிப்பது உடலை அல்ல உலக முஸ்லீம்களின் உள்ளத்தை” - மன்னாரில் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஷாத் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாசா (சடலம்) எரிப்பதை நிறுத்த கோரியும் இன்றைய தினம் திங்கட்கிழமை (2) காலை மன்னார் பஸார் பகுதியல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் மன்னாரில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் சிலரால் மன்னார் சுற்று வட்டப் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 'கொரோனா' தொற்று காரணமாக இறந்து போகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை (சடலம்) எரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், சிறுபான்மை இனத்தின் தலைவராக இருக்கும் முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக் கோரியும் குறித்த கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது, முஸ்லிம் பராளுமன்ற ஜனாஸாக்களே! உங்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா? நீங்கள் மௌனிகளாக இருப்பதற்கு இறக்கலாம், நீங்கள் எறிப்பது உடலை அல்ல உலக முஸ்லீம்களின் உள்ளத்தை, சிறுபான்மை தலைவரான ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், சிறந்த நிர்வாக திறன் கொண்ட ஜனாதிபதி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment