சொப்ட்லொஜிக் க்ளோமார்க் நிறுவன ஊழியர்கள் இருவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

சொப்ட்லொஜிக் க்ளோமார்க் நிறுவன ஊழியர்கள் இருவருக்கு கொரோனா

(நா.தனுஜா) 

சொப்ட்லொஜிக் க்ளோமார்க் நிறுவனத்தின் கொட்டாவ கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இது குறித்து சொப்ட்லொஜிக் க்ளோமார்க் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பொது அறிவித்தலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொட்டாவ பகுதியிலுள்ள எமது நிறுவனக் கிளையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

வைரஸ் தொற்றிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் ஊடாகவே இவ்வாறு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். 

அத்தோடு வாகனத் தரிப்பிடம், உணவறை உள்ளடங்கலாக கொட்டாவ சொப்ட்லொஜிக் க்ளோமார்க் நிறுவனத்தின் அனைத்துப் பகுதிகளையும் தொற்று நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். 

எப்போதும் எமது நிறுவன பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கே நாம் முன்னுரிமை வழங்குகின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment