இங்கிரிய பகுதியில் அமைந்துள்ள முன்னணி ஆடை தொழிற்சாலையில் 21 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் தொழில் புரியும் ஊழியர் ஒருவர் கடந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஏனைய 140 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் முடிவிலேயே மேலும் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேற்படி நபர்கள் ரம்புக்கனவில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய நபர்களிடமும் பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment