வரவு செலவு திட்டத்தில் தேசிய உற்பத்திகளுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

வரவு செலவு திட்டத்தில் தேசிய உற்பத்திகளுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்) 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தேசிய உற்பத்திகளுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி உற்பத்திகளை மட்டுப்படுத்த அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதீடு தொடர்பில் எதிர்த்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அரச ஊழியர்களுக்கு எவ்வித நிவாரணமும் வரவு செலவு திட்டம் ஊடாக முன்வைக்கப்படவில்லை என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரச ஊழியர்களின் நலன்சார் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த வரவு செலவு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி உற்பத்திகளை மட்டுப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த இறக்குமதி உற்பத்திகள் தடை செய்யப்பட்டுள்ளன். தேசிய உற்பத்திகளை பலப்படுத்தப்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment