மஹர சிறைச்சாலை சம்பவம் : விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் அடங்கிய குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 30, 2020

மஹர சிறைச்சாலை சம்பவம் : விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் அடங்கிய குழு நியமனம்

மஹர சிறைச்சாலையில் நேற்று நிகழ்ந்த சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை அமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ளார். 

இதன் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன கடமையாற்றுவார். நீதியமைச்சின் பிரதான நீதி ஆலோசகரான ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா, மேலதிக செயலாளர் ரோஹன ஹப்புகஸ்வத்த, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர். 

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, இந்தக் குழுவின் செயலாளராக கடமையாற்றுவார்.

மஹர சிறைச்சாலையில் நேற்று நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்கும் விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பது குழுவின் நோக்கம். 

இந்தக் குழு ஒரு வாரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், ஒரு மாதத்திற்குள் குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைள் பற்றிய விதந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் சமர்ப்பிப்பது அவசியம் என நீதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment