பொது இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் செல்லப் பிராணியை கொல்ல சீனா உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

பொது இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் செல்லப் பிராணியை கொல்ல சீனா உத்தரவு

மக்கள் தங்கள் செல்லப் பிராணியான நாயை பொது இடத்திற்கு அழைத்து செல்ல சீனாவில் உள்ள ஒரு மாகாணம் தடை விதித்துள்ளது. தடையை மீறி பொது இடங்களில் செல்லப் பிராணி சுற்றித்திரிந்தால் அவற்றை கொல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் தற்போது அந்த வைரசின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான பரிசோதனைகள், விமான போக்கு வரத்து தடை, ஊரடங்கு என பல்வேறு வழிமுறைகள் மூலம் கொரோனா பரவல் அந்நாட்டில் கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது. 

மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போதும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் நடை பயணத்தின்போது செல்லப் பிராணியான நாயை உடன் அழைத்து செல்லும் அதன் உரிமையாளர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு 78 சதவீதம் உள்ளதாக அதிர்ச்சி முடிவுகள் வெளியானது.

இந்த தகவல் வெளியாவதற்கு முன்னதாகவே சீனாவின் யுன்யன் என்ற மாகாணத்தில் உள்ள விஜிங்இன் என்ற நகராட்சி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

அதில் விஜிங்இன் நகர மக்கள் தங்கள் செல்லப் பிராணியான நாயை வீட்டை விட்டு பொது இடங்களுக்கு அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு வாசிகள் தங்கள் செல்லப் பிராணியான நாயை தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். 

ஒரு வேளை விஜிங்இன் நகரவாசிகள் தங்கள் செல்லப் பிராணியான நாயை தடையை மீறி பொது இடங்களுக்கு அழைத்து சென்றாலோ, அல்லது செல்லப் பிராணி நாயை வீட்டில் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்காமல் பொது இடங்களில் சுற்ற அனுமதித்தாலோ உரிமையாளர்களுக்கு முதல் முறை போலீசார் எச்சரிக்கை விடுப்பார்கள். 

அதே தவறு இரண்டாவது முறை நடைபெற்றால் செல்லப் பிராணியின் உரிமையாளருக்கு 200 யூவான் (23 யூரோ) அபராதம் விதிக்கப்பட்டும்.

ஆனால், மூன்றாவது முறையாக அதே செல்லப் பிராணியான நாயை அதன் உரிமையாளர் பொது வெளியில் சுற்றித்திரிய அனுமதித்தாலோ அல்லது உரிமையாளருக்கு தெரியாமல் பொது வெளியில் திரிந்தாலோ அந்த செல்லப் பிராணிகளை கொல்ல போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நகர மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விஜிங்இன் நகர அதிகாரிகள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் உத்தரவு தற்போதுவரை நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad