புறக்கோட்டை மற்றும் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையங்களை திறக்க அனுமதி - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

புறக்கோட்டை மற்றும் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையங்களை திறக்க அனுமதி

(க.பிரசன்னா)

கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையம் என்பவற்றை சுகாதார நடைமுறைகளுடன் திறப்பதற்கு இன்று திங்கட்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கைககளை மேற்கொண்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்றமை தொடர்பாக சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேற்படி கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கோரோனா வைரஸ் தாக்க காலப்பகுதியிலும் சேவையில் ஈடுபடுகின்ற சில பஸ்கள் அதிக பயணிகளுடன் செல்வதாக முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதனை கண்காணிப்பதற்காகவே குழுக்களை நியமித்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுடன், பஸ்களின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணகள் ஏற்றப்படுகின்றார்களா என்பது தொடர்பிலேயே இக்குழு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad