சுகாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த சில வர்த்தகர்கள் முயற்சி - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Friday, November 6, 2020

சுகாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த சில வர்த்தகர்கள் முயற்சி - சம்பிக்க ரணவக்க

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் உதவியுடன் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் சோதனை இயந்திரங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முப்படையினரையும் பொலிஸாரையும் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது அவர்களின் கௌரவத்தினை பாதிக்கின்றது.

படையினர் பயங்கரவாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே பயிற்றப்பட்டவர்கள் நோயாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளிற்காக அவர்கள் பயிற்றுவிக்கப்படவில்லை
தெளிவான பொருளாதார திட்டம் இல்லாதது நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்

இலங்கை வங்குரோத்து நிலையை அடையும் நிலையில் உள்ளது, கொவிட் 19 வேகமாக இந்த நிலையை உருவாக்கி வருகின்றது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் உதவியுடன் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் சோதனை இயந்திரங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளனர், அவர்கள் இந்த நெருக்கடியை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த இயந்திரங்களின் தரம் குறித்து யாருக்கு கவலை ? இந்த வர்த்தகர்கள் பொதுமக்களை கொள்ளையடிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.

தினக்குரல்

No comments:

Post a Comment