வெலிக்கடை சிறைச்சாலையில் 25 க்கும் மேற்பட்ட கொரோன நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் பெருமளவிலான பிசிஆர் சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உபுல் துசாரா உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
நேற்று 300 சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் நேற்றைய சோதனையில் நோயாளிகள் எவரையும் அடையாளம் காணவில்லை என தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட பெண் கைதிகளிற்கான பகுதியிலேயே முதலில் நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு பெண் கைதிகளும், சிறைச்சாலை மருந்தாளர் ஒருவரும், ஆண் கைதிகள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் பெண் கைதிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மேலும் 22 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தற்போது வெலிக்கந்தை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெலிக்கடையின் பெண் கைதிகள் பிரிவிலேயே கொரோனா தொற்று காணப்படுகின்றது என நாங்கள் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாங்கள் அனைத்து சிறைக் கைதிகளையும் சோதனையிட முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment