மஸ்கெலியாவில் நான்கு மாத குழந்தை உட்பட ஏழு பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, November 6, 2020

மஸ்கெலியாவில் நான்கு மாத குழந்தை உட்பட ஏழு பேருக்கு கொரோனா

மஸ்கெலியாவில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய தலைமை அதிகாரி வைத்தியர் டி .சந்திரராஜன் தெரிவித்தார்.

மஸ்கெலியா, ஸ்கம்போ பகுதியில் தந்தை, தாய் மற்றும் நான்கு மாத குழந்தை ஒருவருமாக மூவருக்கும், கார்மோர், ஸ்டஸ்பி, பிரவுன்லோ பகுதியில் நால்வருமாக ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பாதாக இன்று பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மஸ்கெலியா, கங்கேவத்தை பகுதியில் பேலியகொடை மீன் சந்தையோடு தொடர்புடைய ஒருவருக்கு முதலாவதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரோடு தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஏற்கனவே 07 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ள நிலையில், அதன் பின்னராக குறித்த 07 பேருடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின் மூலமே நான்கு மாத குழந்தை உட்பட மேலும் 07 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களை சுயதனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்த அவர் எதிர்வரும் 14 ஆம் திகதி தீபாவளி பண்டிகைக்கு கொழும்பிலிருந்து வருவோரினால் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் வாயப்புகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

No comments:

Post a Comment