(இராஜதுரை ஹஷான்)
அடிப்படைவாதிகளே அரசாங்கம் தோல்வி என குற்றம் சாட்டுகிறார்கள். சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளது. அடிப்படைவாதிகளின் ஆதரவு இல்லாமலே பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றது.
தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய உற்பத்தி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து முன்னுரிமை வழங்கியது. பெரும்பான்மை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பயனை பெற்றுள்ளார்கள்.
அடிப்படைவாதிகளே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தோல்வி என குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களின் குற்றச்சாட்டுகளை பெரும்பாலான மக்கள் கவனத்தில் கொள்ளமாட்டார்கள்.
எதிர்காலத்தில் தோன்றவுள்ள சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடிப்படைவாதிகளின் ஆதரவு இல்லாமல் வரவு செலவு திட்டத்தை பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment