தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்தி விட்டு விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்க்க வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய கொவிட் 19 தொற்றுக் காலப்பகுதியில் பலரும் அல்ஹகோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை அதிகம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
நாளைய தினம் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பட்டாசு, மத்தாப்பு போன்ற பல வெடி வகைகளை குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்படுவதால் தீபற்றக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
தீபற்றக்கூடிய அபாயத்தை குறைப்பதற்காகவே அல்ஹபோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை கை உலர்த்தும் வரை தேய்ப்பதற்கு அறிவுறுத்தப்படுகின்றார்கள். இது எரியக்கூடிய அல்ஹகோல் ஆவியாகிவிட்டதை குறிக்கின்றது.
மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் போன்ற சுகாதார அமைப்புகளுக்கு, பக்டீரியாவைக் கொல்ல உகந்த அல்ஹகோல் செறிவு 70 வீதம் முதல் 95 வீதமாகுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலையம் மற்றும் இலங்கை நுண்ணுயிரியல் கல்லூரி என்பன கை கழுவ பயன்படுத்தும் திரவம் 60 - 70 வீதம் அல்லது அதற்கு அதிகபடியான எதனோலை கொண்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டிருக்கின்றன. இந்நிலை திரவங்கள் இலகுவில் தீபற்றக்கூடியதாகும்.
இதனாலேயே உடனே தீப்பற்றக்கூடிய சிறிதளவு அல்ஹகோல் அடங்கிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு ஒளி விளக்குகளை ஒளிரச்செய்வதை தவிர்க்க வேண்டுமெனவும் மத செயற்பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் சவர்க்காரமிட்டு கைகளை கழுவவும் சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment