சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட தீர்மானம்

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் சுற்றுலா விடுதி முகாம் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுதப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் பரவியதன் காரணமாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம் நிலப்பரப்புக்களில் அருகில் உள்ள பகுதிகளை 2020.11.02 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக இங்கு வசதிகளை ஒதுக்கீடு செய்துக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்காக வேறு தினமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட சுற்றுலா வசதிகளை ஒதுக்கி கொண்டுள்ள சுற்றுலா குழுவினருக்கு தனித்தனியாக அறிவிப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment