இலங்கையில் 22ஆவது கொரோனா மரணமாக அறிவிக்கப்பட்ட மரணத்தை, கொரோனா காரணமான மரணமாக கருத முடியாது என, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
அப்பிரிவின், பிரதான தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்த 27 வயது நபரின் மரணம், இலங்கையில் 22ஆவது கொரோனா காரணமான மரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருந்ததோடு, கொவிட்-19 நோயினால் மரணமடைந்ததாக கருதப்பட வேண்டுமாயின், அந்நோயின் தாக்கத்தினால் மரணமடைந்திருக்க வேண்டும் என்பதால், குறித்த முடிவை எடுத்துள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக, இதுவரை 21 மரணமே பதிவாகியுள்ளதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment