கோத்தா, மஹிந்தவின் மின்சார "ஷோக்" விரைவில் எதிர்க்கட்சியை தாக்கும் - மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

கோத்தா, மஹிந்தவின் மின்சார "ஷோக்" விரைவில் எதிர்க்கட்சியை தாக்கும் - மஹிந்தானந்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் மின்சார பாய்ச்சல் இன்னமும் எதிர்க்கட்சிக்கு சரியாக சென்றடையவில்லை. இன்னமும் எமது மின்சார "ஷோக்" எதிர்க்கட்சிக்கு அடிக்கவில்லை. ஆனால் வெகு விரைவில் மின்சார தாக்கம் என்னவென்று விளங்கும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர் வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் மின்சார பாய்ச்சல் இன்னமும் எதிர்க்கட்சிக்கு சரியாக சென்றடையவில்லை. இன்னமும் எமது மின்சார ஷோக் எதிர்கட்சிக்கு அடிக்கவில்லை, அதனால்தான் எம்மை பற்றி தெரியாது விமர்சித்துக் கொண்டுள்ளீர்கள். இன்னும் சில நாட்களில் இந்த மின்சார ஷாக் அடித்ததும் உங்களின் வாய்கள் தானாக மூடும். அப்போது எம்மைப்பற்றி தெரியும். 

முன்னைய ஆட்சியில் அரச திணைக்களங்கள் அனைத்துமே நட்டத்தில் இயங்கியது, ஆனால் நாம் மீண்டும் அமைச்சுக்களையும், திணைக்களங்களையும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இப்போதே இலாபமடைய ஆரம்பித்துள்ளது. கோடி கணக்கில் களவு செய்து நட்டத்திற்கு கொண்டு சென்ற அமைச்சுக்களை பற்றி பேச எதிர்க்கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.

இந்த ஆட்சி முடிய முன்னர் நாட்டில் சகல வீட்டிற்கும் மின்சாரம் கிடைக்கும். பாதைகள் திருத்தப்படும். தொழிற்சாலைகள் திறக்கப்படும். மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எமது அரசாங்கம் காப்பாற்றும். புதிய முயற்சிகள் உருவாக்கப்படும். இவற்றை நீங்கள் பார்ப்பீர்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டில் சகல மக்களுக்கும் நீர், மின், வீதி அபிவிருத்திகளை முழுமையாக கிடைக்கும்.

அதேபோல் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு ஒதுக்கியுள்ள நிதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினீர்கள். ஆனால் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்த அரசாங்கம் எந்தவொரு அரச நிதியையும் ஒதுக்கவில்லை, இந்த போட்டிகளை நடத்தும் தனியார் நிறுவனங்களே போட்டிகளுக்கான நிதி உதவிகளை செய்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment