கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையில், ஊழியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த ஊழியர் கடமைகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு அலுவலகம் மற்றும் அதிகாரிகளுடன் குறைந்தபட்ச தொடர்பை கொண்டிருந்தார். அவருடன் முதன்மை தொடர்புகள் கொண்டோர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்ப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமான கடந்த சில வாரங்களாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் குறைந்தளவான ஊழியர்களே கடமை புரிந்து வந்தனர்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முழு வளாகமும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவுவதாகவும், ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தியா உறுதியுடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment