வீதிகளில் மீன்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

வீதிகளில் மீன்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை

மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்ட பகுதிகளில் வீதிகளில் அல்லது வேறு இடங்களில் மீன் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹானா மேலும் தெரிவித்ததாவது, மீன் விற்பனை நிலையங்களிலிருந்துதான் கொரோனா தொற்று விரைவாகப் பரவியுள்ளது.

இந்நிலையில், மீன் விற்பனையில் ஈடுபடும் மீனவர்களிடம் அதிகம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் மீன் விற்பனை நிலையங்களை மூட தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், மீனவர்கள் வீதிகளில் மீன்களை விற்க சுகாதார அதிகாரின் அனுமதியோடு விற்பனை மேற்கொள்ளலாம். இது தவிர சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி மீன் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நட வடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் அல்லது 10 ஆயிரம் ரூபா அபாரா தொகை செலுத்த வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment