அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரச்சார கூட்டங்களால் இத்தனை பேருக்கு கொரோனா தொற்றா? - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரச்சார கூட்டங்களால் இத்தனை பேருக்கு கொரோனா தொற்றா?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும் விலையை கொடுத்துள்ளனர் என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளது. 

அதில், ஜூன் 20ஆம் திகதி முதல் செப்டம்பர் 22ஆம் திகதி வரை ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய 18 தேர்தல் கூட்டத்தினால் கூடுதலாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 700 க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும் விலையை கொடுத்துள்ளனர் எனவும் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ட்ரம்ப் கூட்டம் நடைபெறும் இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், நிலைமை மேலும் மோசமாகலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ட்ரம்பை விமர்சனம் செய்துள்ளார். மக்களைப் பற்றி கவலைப்படாத ட்ரம்ப், தன்னுடைய ஆதரவாளர்கள் பற்றியும் கவலைப்படவில்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment