நாட்டில் நன்மை ஏற்பட்டால் அதற்கு தாமே காரணம் என்று கூறுகின்றனர், ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் மக்கள் மீது சுமத்துகின்றனர் - ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

நாட்டில் நன்மை ஏற்பட்டால் அதற்கு தாமே காரணம் என்று கூறுகின்றனர், ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் மக்கள் மீது சுமத்துகின்றனர் - ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு

(செ.தேன்மொழி)

நாட்டில் நன்மை இடம்பெறும்போது அதற்கு தாமே காரணம் என்று கூறும் ஆளுந்தரப்பு, ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்துகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பரவலுக்கான பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள ஆட்சியாளர்கள் நாட்டில் நன்மையான விடயங்கள் இடம்பெற்றால் அதற்கு காரணம் தாம் என்றும், ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்கு காரணம் நாட்டு மக்கள் எனவும் பழி சுமத்தும் குணம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமலிருந்தனர். அதனால் மீண்டும் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் எம்மைப் பொறுத்த வரையில் கொரோனாவைப் போன்று 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் ஒரு வைரஸ் தொற்றாகும்.

வைரஸ் பரவலின் காரணமாக 15 இலட்சம் பேருக்கு தொழில் இல்லாமல் போயுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் தருணத்தில் நாட்டுக்கு பயன்தரும் செயற்பாடுகளை அரசாங்கம் செய்யாவிட்டாலும், நாடு பூராகவும் வைரஸை பரப்பியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment