மோட்டார் வாகன திணைக்கள பிரதான அலுவலகம் நாளை திறப்பு - முற்பதிவின் அடிப்படையில் மாத்திரம் சேவைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

மோட்டார் வாகன திணைக்கள பிரதான அலுவலகம் நாளை திறப்பு - முற்பதிவின் அடிப்படையில் மாத்திரம் சேவைகள்

நாளை (24) செவ்வாய்க்கிழமை முதல் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பொதுமக்கள் சேவைக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று பரவல் நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த, நாரஹேன்பிட்டி பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம், சுமித் சீ.கே. அளககோன் தெரிவித்துள்ளார்.

சேவை பெறுனருக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க நாரஹேன்பிட்டியில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தை, வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் முன்கூட்டிய நாள் மற்றும் நேர பதிவின் அடிப்படையில் மாத்திரம் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதுதவிர, யாழ்ப்பாணம், அநுராதபுரம், குருணாகல், கம்பஹா, அம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகங்கள் மூலம், தொடர்ந்தும் வாகன உரிமையாளர் மாற்றம் தொடர்பான சேவைகள் இடம்பெற்று வருவதால், சேவை பெறுனர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அலுவலகம் மூலம் சேவைகளைப் பெறுவதற்கான வசதியும் காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில், அலுவலக வளாகத்திற்கு வருபவர்கள், சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதோடு, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற வழக்கமான சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட ஊழியர்களுடன் சேவைகளை வழங்கவுள்ளதால், தற்போதைய நிலைமையை கருத்திலெடுத்து, புரிந்துணர்வு, பொறுமை மற்றும் பொறுப்புடன், பணிக்குழாம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு தங்களது ஆதரவை வழங்குமாறு, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம், சுமித் சீ.கே. அளககோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரிவுகளும் தொடர்பு இலக்கங்களும்
கார், வேன், லொறி புதிய பதிவு
0706354107 / 0706354108

பஸ், காணி வாகனம் புதிய பதிவு
0706354109

மோட்டார் சைக்கிள் புதிய பதிவு
0706354110 / 0706354111

முச்சக்கர வண்டி புதிய பதிவு
0706354112 

கார் உரிமை மாற்றம்
0706354114 / 0706354115

முச்சக்கர வண்டி உரிமை மாற்றம்
0706354116 / 0706354117 

வர்த்தக வாகனம் உரிமை மாற்றம்
0706354118 / 0706354119

லொறி உரிமை மாற்றம்
0706354120

மோட்டார் சைக்கிள் உரிமை மாற்றம்
0706354137 / 0706354138 

பஸ், காணி வாகன உரிமை மாற்றம்
0706354139 / 0706354140 

வாகன இலக்கத் தகடு
0706354141

தொழில்நுட்ப உதவி
0706354142

விபரங்கள்
0706354144

சொகுசு, அரைச் சொகுசு வரி
0706354145

ஏனைய விடய விபரங்களுக்கு
0706354146 / 0706354147 / 0706354148 / 0706354149 

முறைப்பாடு, யேசானை
0706354150

No comments:

Post a Comment