பாப்பரசரின் இன்ஸ்டாகிராமில் இருந்து ஆபாச அழகிக்கு 'லைக்' - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

பாப்பரசரின் இன்ஸ்டாகிராமில் இருந்து ஆபாச அழகிக்கு 'லைக்'

ஆபாச உடை அணியும் பிரேசில் அழகியின் புகைப்படம் ஒன்றுக்கு பாப்பரசரின் உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ‘லைக்’ செய்யப்பட்டிருப்பது குறித்து வத்திக்கான் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நடாலியா கரிபோட்டோ என்ற அந்த அழகி ஆபாசமாக பாடசாலை உடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றுக்கே இவ்வாறு ‘லைக்’ செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்தி கடந்த வாரம் வெளியான நிலையில் அந்த ‘லைக்’ நீக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் கணக்கில் இருந்து இவ்வாறு நிகழ்ந்தது எவ்வாறு என்பது பற்றியே வத்திக்கான் விசாரணைகளை நடத்தி வருகிறது. 

“வத்திக்கானில் இருந்து இந்த ‘லைக்’ வந்தது என்பதை நாம் விலக்குகிறோம். இது பற்றிய விளக்கத்திற்கு இன்ஸ்டாகிராமை நாடியுள்ளோம்” என்று வத்திக்கான் பேச்சாளர் ஒருவர் கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் பிரான்சிஸ் சமூக ஊடகங்களில் அதிக பின்தொடர்பைக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.

கணக்கில் 971 இடுகைகள் உள்ளன மற்றும் வேறு எந்த கணக்குகளையும் அவர் பின்பற்றவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad