அனைத்து அதி வேக வீதி நுழைவாயில்களும் நாளை திறப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

அனைத்து அதி வேக வீதி நுழைவாயில்களும் நாளை திறப்பு

மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அதி வேக வீதி நுழைவாயில்கள் நாளையதினம் (09) திறந்திருக்கும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் களப்படை தலைமையகத்தில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேல் மாகாணம் முழுவதும் கடந்த 30ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது நாளையதினம் (09) நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad