இலங்கையில் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி - வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே நடைமுறை - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

இலங்கையில் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி - வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே நடைமுறை

(எம்.ஆர் எம். வசிம்)

இலங்கையில் கொவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

இன்று (9) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்றி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்த போதே ஜனாதிபதி இது தொடர்பான அனுமதியை வழங்கியுள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை முதல் கட்டமாக மன்னார் பிரதேசத்தில் இடமொன்றை ஒதுக்கி அடக்கம் செய்வதற்கு ஆராயப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியானதன் பின்னரே இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment