(இராஜதுரை ஹஷான்)
குறுகிய காலத்துக்குள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்களாணையை முழுமையாக பெற்றுள்ளது. மக்களின் ஆதரவை எதிர்காலத்திலும் பொதுஜன பெரமுன பெறும் என கட்சியின் தவிசாளர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4 வருட நிறைவினையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
2015ஆம் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் ரீதியில் பெரும்பாலானோர் தனித்து விடப்பட்டார்கள்.
ராஜபக்ஷர்களின் ஆட்சி நாட்டுக்கு அவசியம் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள். அனைவரது அபிலாசைகளை கருத்திற் கொண்டு பசில் ராஜபக்ச 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்தார்.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்களின் அரசியல் தீர்மானம் வெளிப்பட்டது. கட்சியை உருவாக்கி குறுகிய காலத்துக்குள் 71 ஆசனங்கை கைப்பற்றுவது சாதாரண விடயமல்ல.
அதனை தொடர்ந்து 2019 நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி இரட்டிப்பானது. சுமார் 69 இலட்ச மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு ஆட்சியதிகாரத்தை வழங்கி பலமான அரச நிர்வாகத்தை உருவாக்கினார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கமசமக பிலிசதர, சுபீட்சமான எதிர் காலம் ஆகிய கொள்கை அடிப்படையில் செயற்பட்டதால் இடம் பெற்று முடிந்ந பொதுத்தேர்தலில் மூன்றில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்டது.
குறுகிய காலத்தில் பொதுஜன பெரமுன மக்களாணையை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளது. இது எதிர்காலத்திலும் பாதுகாக்கப்படும்.
No comments:
Post a Comment