பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்காது, 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த தீர்மானம்! - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்காது, 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்து சுகாதார அமைச்சினால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தொற்று அறிகுறிகள் அற்ற அல்லது மிகக் குறைந்தளவில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடம் காணப்படும் வைரஸ் சாதாரணமாக 10 நாட்களின் பின்னர் பிறருக்கு பரவாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே வைத்தியசாலையிலிருந்து செல்பவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்காது. மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு மாத்திரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கடும் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைகளின் பின்னரே வீட்டுக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கடும் தொற்று அறிகுறிகள் உள்ள தொற்றாளர்கள் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் வைத்தியசாலையில் மேலதிகமான சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையிலேயே இருக்கும். 

எனவே ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை படுக்கைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment