விசேட புகையிரத சேவையில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

விசேட புகையிரத சேவையில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது

(இராஜதுரை ஹஷான்)

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், மற்றும் பரீட்சை சேவையாளர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள புகையிரத்தில் பொது பயணிகள் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என புகையிரத நிலைய அதிபர் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மேல் மாகாணம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் மற்றும் பரீட்சை மண்டப சேவையாளர்களுக்காக விசேட புகையிரத சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இந்த விசேட புகையிரத சேவையில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் புகையிரத சேவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும்.

கொவிட்-19 வைரஸ் முதலாம் சுற்று வேளையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை விட பயனுடைய திட்டங்களை இம்முறை செயற்படுத்த சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவை இனி முறையாக செயற்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment