நள்ளிரவில் வீடு உடைத்து தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் திருட்டு - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

நள்ளிரவில் வீடு உடைத்து தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் திருட்டு

யாழ். கரணவாய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டுப் போயுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணத்தை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (15) நள்ளிரவு 12.00 மணியளவில் இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த 5 திருடர்கள் வீட்டாரை அச்சுறுத்தி அங்கிருந்த தங்கச் சங்கிலி ஒன்று, இரண்டு மோதிரங்கள், ஒரு காப்பு, 5,300 ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(நாகர்கோவில் விசேட நிருபர் - ஜெகதீஸ் சிவம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad