50 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து - சாரதி படுகாயம் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

50 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து - சாரதி படுகாயம்

திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை எதன்சைட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் சிறிய லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதனால், குறித்த லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (16) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையிலிருந்து எதன்சைட் தோட்டத்திற்கு சென்று திரும்பி கொட்டகலை நோக்கி வந்துகொண்டிருக்கையில் திடீரென லொறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகிச் சென்று, தேயிலை மலையில் 50 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்துள்ளது.

இவ்விபத்துக் காரணமாக லொறி கடும் சேதமடைந்துள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை திம்புள்ளை, பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment

Post Bottom Ad