பல நாடுகள் ரஷியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெறவும், கூட்டாக தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை (Vladimir Putin) கூறியுள்ளார்.
உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பல நாடுகளில் பரிசோதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை (Vladimir Putin) நேற்று மாஸ்கோவில் இருந்தவாறு, வியட்னாம் நடத்திய கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வழியாக உரையாற்றினார்.
அப்போது அவர் டஸின் கணக்கிலான நாடுகள் ரஷியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெறவும், கூட்டாக தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, கொரோனா பரிசோதனை முறைகளை கூட்டாளிகளுக்கு இலவசமாக வழங்கி ஒத்துழைக்க ரஷியா தயாராக இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment