வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது, சொந்த செலவில் மீள் நடுகை செய்யவும் - தீர்ப்பளித்தது நீதிமன்றம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது, சொந்த செலவில் மீள் நடுகை செய்யவும் - தீர்ப்பளித்தது நீதிமன்றம்

வடக்கில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றுவதற்காக, வில்பத்து வனப் பகுதியில் காடழிப்பு செய்து மீள் குடியமர்த்தியமை சட்டவிரோதமானது என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு தொடர்பிலான தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இத்தீர்ப்பை அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் பேரில், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக வில்பத்து பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அகற்றப்பட்டமை சட்டவிரோதமானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அத்துடன், அவ்வாறு ரிஷாட் பதியுதீனின் தனிப்பட்ட செலவில் குறித்த வனப்பகுதியை மீள் நடுகை செய்யுமாறும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், மனுதாரரான சுற்றுச்சூழல் நீதி மையத்தின் வழக்குகளுக்கான செலவையும் மீள செலுத்துமாறு, பிரதிவாதியான ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad