கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று - மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை - பாடசாலைகளை மூடுமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று - மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை - பாடசாலைகளை மூடுமாறு உத்தரவு

கிளிநொச்சியில் முதலாவது கொறோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்று சமூகத் தொற்றென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மக்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

குறித்த தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூடுமாறு வட மாகாண கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் எரிபொருள் கடை ஒன்றினை நடத்தி வரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறு தொற்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம் திருவையாறு தர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரொனா நோயாளிகள் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல்களுக்குட்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த நபர் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் (21) முதலாவது பிரிசோதனை மாதிரி பரிசோதனைக்காக அனுப்பட்டபோது கண்டறிய முடியாத முடிவாக (Inconclusive) கிடைக்க பெற்றுள்ளது. 

நேற்றையதினம் (22) மீளவும் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சி பாரதி புரத்தைச் சேர்ந்த நபர் வெளியிடங்களுக்கு எங்கும் சென்று வராத நிலையில் இவருக்கான தொற்று சமூக தொற்றென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்படி நபர் சிகிச்சை பெறச் சென்ற சமயம் பொது வைத்தியசாலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றபட்டதன் விளைவாக குறித்த நபர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் சென்றது முதல் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உரிய பாதுகாப்புடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது வரை நோயாளியை உரியவாறு கையாண்டமையால் வைத்தியசாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படாது பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை ஊழியர்களோ, நோயாளர்களோ பயனாளிகளோ பதற்றமடைய தேவையில்லை எனவும் அனைத்து நோயாளர் நலன் சேவைகளும் இடையூறின்றி வழமைபோல் நடைபெறுமெனவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். 

இவ்வாறு கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாரதி புரத்தத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் பணி புரிந்த தொண்டமான் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமும் தனிமைப்படுத்தப்பட்டது.

இதேவேளை நாளை முதல் ஒரு வாரத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகைளையும் மூட வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகத் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment