வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள்- ட்ரம்ப் ட்விட் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள்- ட்ரம்ப் ட்விட்

வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்துள்ளது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

வல்லரசாக பெருமைப்பட்டு கொள்ளும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைய போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்ற முடிவை எதிர்பார்த்து உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.

எனினும், தேர்தல் முடிந்து 2 நாட்கள் கடந்த பின்னும் வாக்கு எண்ணிக்கையில் இழுபறியான நிலை நீடித்து வருகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பைடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

முன்னாள் துணை ஜனாதிபதி பைடன் இப்போது அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுதேர்தலை கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகளின் இறுதி முடிவு அலாஸ்கா (3), ஜார்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20 தேர்தல் கல்லூரி வாக்குகள்) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளை பொறுத்து அமையும்.

பைடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா (6) தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். 

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment