அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமான வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் தலைமை அதிகாரியாக ரோன் கிளைனை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இந்த பணியில் ஜனாதிபதியின் செயல் அலுவலகத்தின் மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன் ஜனாதிபதியின் செனட் ஆலோசகராகவும் ரோன் ரோன் கிளையின் செயல்படுவார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய 77 வயது ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் ஜனவரி மாதம் 20ம் திகதி அந்த நாட்டின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
ஆட்சி மாற்றத்துக்கான ஆயத்த நடவடிக்கைகளில் அவரும், அவரது குழுவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமான வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் தலைமை அதிகாரியாக ரோன் கிளைனை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
வெள்ளை மாளிகை நிர்வாகம், ரோன் கிளைன் வசம் வரும். வெள்ளை மாளிகையின் மிக முக்கிய பதவி இது. ஜனாதிபதியின் அன்றாட செயல்பாடுகளை நிர்வாகம் செய்வார். வெள்ளை மாளிகையில் இவரது கவனத்துக்கு வராமல் ஒரு துரும்பு கூட அசைய முடியாது.
முக்கிய பிரச்சினைகளில் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கும் உதவக் கூடிய திறமையாளர்கள் குழுவையும் ரோன் கிளைன் ஏற்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஜோ பைடனின் மூத்த உதவியாளர் ஆவார். 1980 களில் இருந்து ஜோ பைடனிடம் இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் வெள்ளை மாளிகையில் மூத்த உதவியாளராகவும், துணை ஜனாதிபதி அல்கோரின் தலைமை அதிகாரியாகவும் இதற்கு முன் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோன் கிளைன் பற்றி ஜோ பைடன் குறிப்பிடுகையில், “அவருக்கு ஆழ்ந்த, மாறுபட்ட அனுபவம் உண்டு. அரசியல் அரங்கில் அனைத்து தரப்பினருடனும் பணியாற்றும் திறனும் இருக்கிறது” என கூறினார்.
அத்தோடு 2009 மற்றும் 2014 இல் ஏற்பட்ட பொருளாதார, சுகாதார நெருக்கடி காலக்கட்டங்களில் ரோன் கிளைன் சிறப்பாக பணியாற்றியவர் என ஜோ பைடன், ரோன் கெயினை பாராட்டி உள்ளார்.
தனது நியமனம் பற்றி ரோன் கிளைனை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment