மட்டக்களப்பில் கொரோனா, வெள்ளம், டெங்கிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

மட்டக்களப்பில் கொரோனா, வெள்ளம், டெங்கிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல்

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏட்படவிருக்கும் வெள்ள அனர்த்தத்திற்கான முன் ஆயத்தங்களை ஆராய்வதுடன் டெங்கு பரவலினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கரணாகரன் தலைமையில் நேற்று (17) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் டெங்கு நோய் பரவலையும் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் வேளையில் மக்களை பாதுகாக்க ஏற்படுத்தப்படும் இடைத்தங்கல் முகாம்களை எவ்வாறு நிர்வகிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் தாக்கத்திலும் 30 மடங்கு மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு நோயினை பரவாமல் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுக்கிடையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனடிப்படையில் மக்களை விழிப்புணர்வூட்டி டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் வகையில் உள்ள இடங்களை இனங்கண்டு அகற்றுதல், நுளம்புக்கடி ஏற்படாதவகையில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்ளல், மேலும் உள்ளூராட்சி மண்றங்கள், பிரதேச செயலகங்கள், பொதுச் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளையும் இணைத்துக் கொண்டு வழிப்புணர்வினையும் விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உயிர் கொல்லி டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களினது ஒத்துழைப்பே அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment