மருதூர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார் - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

மருதூர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருத்தியாக தன்னை சர்வதேசம் வரை அடையாளப்படுத்திக் கொண்ட கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி திங்கட்கிழமை (23) இரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் காலமானார்.

மருதூரில் பிரகாசித்த பெண் ஆளுமைகளில் ஒருவரான இவர், பெண்களின் கல்வி, உரிமைகள், சமூகப் பிரச்சினைகளை தனது எழுத்தால் வெளிக்கொணர்ந்து, தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அயராது பாடுபட்ட ஒருவர்.

அன்னாரின் இழப்பு இலக்கிய உலகத்திற்கும் மருதூருக்கும் பேரிழப்பு.

அன்னாரின் சகல பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கம் கிடைக்க வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்வதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் மன நிம்மதியை வழங்கிட இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்!

No comments:

Post a Comment