முந்தனை ஆறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்கப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் மற்றும் கித்துள் குளங்களினை இணைத்து உருவாக்கப்படவுள்ள நீர்த் தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதற்கான சாத்திய வளங்களை ஆராயும் விசேட கூட்டம் அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
பிரான்ஸ் நாட்டு அபிவிருத்தி நிறுவணம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றம் இலங்கை அரசின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் முந்தனை ஆறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தில் உறுகாமம், கித்துள் குளங்கள் இணைத்த நீர்த் தேக்கத்திட்டம் 58 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருந்தன.
இருப்பினும் தற்பொழுது இந்நீரத் தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதன் மூலம் இப்பகுதியில் தற்போதுள்ள 11 ஆயிரம் நீர்ப்பாசனக் காணிகளுக்கு மேலதிகமாக 14 ஆயிரத்தி 230 ஏக்கர் விவசாய காணிகளுக்கு இரு போகத்திற்கான நீர்ப்பாசனம் வழங்க முடிவதுடன், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளையும் வழங்க முடியுமாகவுள்ளது.
இந்நீர்த் தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்துவதற்கான சாத்தியவள அறிக்கை சம்மந்தப்பட்ட திணைக்களங்களினாலும், நிபுனர் குழுவினாலும் ஆராயப்பட்டு வருகின்றதுடன் இதுவரை அவ்அறிக்கை நிறைவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
No comments:
Post a Comment