காலநிலைக்கு ஏற்ற நீர்ப்பாசன விவசாய செய்கை தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் 20 குளங்கள் புனரமைப்பு செய்வதுடன் அது தொடர்பான பாதைகள் வாய்க்கால்கள் கால்வாய்கள் என்பவற்றை புனரமைப்பு செய்து வரட்சியினால் பாதிக்கப்படுகின்ற விவசாய மக்களின் பொருளாதாரத்தினை மேன்படுத்தி மக்களை பாதுகாக்கும் செயல்திட்டமாகும்.
இச்செயல்த்திட்டமானது இலங்கையில் ஆறு மாகாணங்களில் 11 மாவட்டத்தில் 44 கமநல சேவை பிரிவுகளில் 23800 மில்லியன் நிதியில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவில் 15 குளங்களும், கறடியநாறு கமநல சேவைகள் நிலைய பிரிவில் 17 குளங்களும், ஆயித்தியமலை கமநல சேவைகள் நிலைய பிரிவில் 03 குளங்களும் மெத்தம் 34 குளங்கள் அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டபோதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆராய்ந்து துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment