மன்னாரில் 710 கிலோ மஞ்சள், 3 கிலோ கஞ்சா மீட்பு - சந்தேகநபர்கள் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

மன்னாரில் 710 கிலோ மஞ்சள், 3 கிலோ கஞ்சா மீட்பு - சந்தேகநபர்கள் இருவர் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட, மேலும் 710 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த மஞ்சள் 710 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3.7 கிலோகிராம் கஞ்சாவுடன், 2 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றையதினம் (20) மன்னார், எருக்கலம்பிடி கடற்கரை பகுதியில், பொலிஸாருடன் இணைந்து வட மத்திய கடற்படை கட்டளை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த படகை சோதனையிட்டபோது, அதில் 10 உரப் பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 710 கி.கி. மஞ்சள் மற்றும் பொதியொன்றில் 3.7 கிலோகிராம் கேரள கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அப்படகில் இருந்த, இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மன்னார், எருக்கலம்பிடி பகுதியில் வசிக்கும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad