68 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐம்பொன் சிலைகள் யாழில் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

68 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐம்பொன் சிலைகள் யாழில் மீட்பு

வட்டுக்கோட்டை - சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 

இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணியளவில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். 

சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே மீட்கப்பட்டன. 

அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

நீண்ட காலத்துக்கு முன்பு அவை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், மீட்கப்பட்ட சிலைகள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 

அந்தச் சிலைகளை இந்தியாவுக்கு கடத்தும் நோக்குடன் குளத்துக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad