கட்டார், துபாயிலிருந்து 61 பேர் இலங்கை வருகை - துபாய், மாலியிலிருந்து 60 பேர் திரும்பவுள்ளனர் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

கட்டார், துபாயிலிருந்து 61 பேர் இலங்கை வருகை - துபாய், மாலியிலிருந்து 60 பேர் திரும்பவுள்ளனர்

இன்று (15) காலை கட்டாரிலிருந்து 41 பேர் உள்ளிட்ட 61 பேர் நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை QR 668 எனும் விமானம் மூலம் கட்டாரின் டோஹா நகரிலிருந்து 41 பேரும், UL 226 எனும் விமானம் மூலம் துபாய் நகரிலிருந்து 20 பேரும் என, 61 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் இன்று (15) இரவு EK 648 எனும் விமானம் மூலம் துபாயிலிருந்து 59 பேரும், UL 104 எனும் விமானம் மூலம் மாலைதீவு நாட்டின் மாலை நகரிலிருந்து ஒருவரும் நாடு திரும்பவுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய மற்றும் நாடு திரும்பவுள்ள அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad