திருமணமாகி 3 மாதங்கள் - மரத்தில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

திருமணமாகி 3 மாதங்கள் - மரத்தில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மூதூர், சம்பூர் 03 பகுதியைச் சேர்ந்த யோகைய்யா நித்தியன் (34) என்பவரது சடலம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

திருமணமாகி 3 மாதங்கள் ஆகிய நிலையில் சம்பூர் பிரதேசத்தில் உள்ள குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம். நூருல்லா சடலத்தைப் பார்வையிட்டு அதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார்.

கடந்த ஜனவரி முதல் இன்று வரைக்கும் சம்பூர் பொலிஸ் பிரிவில் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad