பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 601 சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 601 சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு

(செ.தேன்மொழி) 

வருட ஆரம்பத்திலிருந்து இதுவரையில் பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது 601 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது பொலிஸார் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மாத்திரமல்லாது ஏனைய குற்றத் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

அதற்கமைய கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள், உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். 

அத்துமாத்திரமல்லாது சுற்றி வளைப்புக்கள் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் 601 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதற்கமைய 54 ரீ 5 துப்பாக்கிகளையும், ஐந்து ரீ81 துப்பாக்கிகளையும், இரண்டு ரய்பஸ்யையும், 39 கைத்துப்பாக்கிகளையும், 27 ரிவோல்வர்களையும் ஆறு ரிப்பிட் ரக துப்பாக்கிகளையும், 161 சொட் துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும் மார்சல் லோடிங் துப்பாக்கிகள் 188, உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் 32 கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய வகை துப்பாக்கிகள் சிலவற்றையும் பொலிஸார் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment