லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 56 பேருக்கு கொரோனா - 90 ஊழியர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 56 பேருக்கு கொரோனா - 90 ஊழியர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு, லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 56 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 56 கொரோனா நோயாளர்களில் ஐந்து வைத்தியர்களும், இரண்டு தாதியர்களும், மூன்று ஊழியர்களும், 46 தாய்மார்களும் குழந்தைகளும் அடங்குவர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா நோயாளர்களும் அங்கொட தேசிய தொற்று நோயியில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வைத்தியசாலையின் 90 ஊழியர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் வைத்தியசாலையின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment