ஏறாவூரில் முதலாவது கொரோனா தொற்றாளர் - மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 44 பேர் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

ஏறாவூரில் முதலாவது கொரோனா தொற்றாளர் - மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 44 பேர் அடையாளம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள மிச்நகர் கிராமத்தில் வியாழக்கிழமை 05.11.2020 ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார்.

53 வயதான இவர் மீன்களை வாங்கி விற்கும் மொத்த மீன் வியாபாரி என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதரிகாரிப் பிரிவில் கோறளைப்பற்று மத்திலுள்ள மீனவர் கொத்தணியைச் சேர்ந்த இருவருக்கு புதன்கிழமை இரவு 04.11.2020 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் 44 பேரும், திருகோணமலையில் 13 பேரும் கல்முனையில் 18 பேரும் அம்பாறையில் 6 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment