இங்கிலாந்தில் டிசம்பர் 2ம் திகதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

இங்கிலாந்தில் டிசம்பர் 2ம் திகதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை

இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் டிசம்பர் 2ம் திகதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக் கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் இங்கிலாந்தில் கொரோனாவின் 2ம் அலை பரவத் தொடங்கியது. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.

நவம்பர் 5ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும், தேவை ஏற்பட்டால் மீண்டும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் டிசம்பர் 2ம் திகதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக் கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

அதே நேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment