இன்று (05) காலை கட்டாரின், டோஹாவிலிருந்து 22 பேர் இலங்கை திரும்பியுள்ளனர்.
டோஹா, கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் ஊடாக 22 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டுக்கு வந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று (04), எந்தவொரு விமானமும் பயணிகளை ஏற்றி வரவில்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment