முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 156 பேர் இன்று (05) தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 156 பேரும் இன்று வீடு திரும்புகின்றனர்.
கொக்கலை ரிசோர்ட் 92 பேர்
ரனவெலி ஹோட்டல் 27 பேர்
கல்கந்த 37 பேர்
அந்த வகையில், முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (05) வரை 63,419 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 2,601 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், நேற்றையதினம் (03) மாத்திரம் 10,655 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை இலங்கையில் 546,803 PCR சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்றையதினம் (02) குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிய 277 பேரில், ஒருவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதோடு, ஏனைய 276 பேரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment