தனிமைப்படுத்தப்பட்ட 228 பேர் வீடு திரும்பினர் - நேற்று 11,087 PCR சோதனைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

தனிமைப்படுத்தப்பட்ட 228 பேர் வீடு திரும்பினர் - நேற்று 11,087 PCR சோதனைகள்

முப்படையினரால்‌ நிர்வகிக்கப்படும்‌ தனிமைப்படுத்தல்‌ நிலையங்களிலிருந்து இன்று (01) 228 பேர் தமது‌ வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக‌, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பின்வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 228 பேரும் இன்று வீடு திரும்புகின்றனர்.

பல்லேகல விவசாய பயிற்சி நிலையம் 69 பேர்
கல்கிஸ்ஸை ஹோட்டல் ஒருவர்
ஹோட்டல் கோல்ட் சேண்ட் 08 பேர்
விடத்தல்பளை 132 பேர்
மீரிகமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 18 பேர்

அந்த வகையில், முப்படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (02) வரை 61,955 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,039 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நேற்றையதினம் (01) மாத்திரம் 11,087 PCR சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை இலங்கையில் 523,822 PCR சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (01) குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிய 506 பேரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment