ஈராகில் 21 பயங்கரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 17, 2020

ஈராகில் 21 பயங்கரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

ஈராக்கில் தற்கொலைப் படைத் தாக்குதல், கொலை வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 21 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈராக்கில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா, ரஷியா உட்பட பல நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து அப்பாவி பொதுமக்கள் மீதும் அரசு படையினர் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதிகள் பலரும் கைது செய்யப்பட்டு ஈராக், சிரியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதிகள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை, தூக்குத் தண்டனை என குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் 21 பேருக்கு ஈராக் அரசு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதிகள் ஈராக்கின் நஸ்ரியா மாகாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் ஆகும். 

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதிகள் 21 பேரும் கொலை குற்றங்கள், டல் அப்ரா நகரில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என ஈராக் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment