கொழும்பு துறைமுகத்தில் சுமார் 200 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 61 துறைமுக ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களே அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 106 ஊழியர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, அவர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment